/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரசாயன உரம் தவிர்த்து தக்கை பூண்டு பயிரிட வேளாண் அதிகாரி 'அட்வைஸ்'
/
ரசாயன உரம் தவிர்த்து தக்கை பூண்டு பயிரிட வேளாண் அதிகாரி 'அட்வைஸ்'
ரசாயன உரம் தவிர்த்து தக்கை பூண்டு பயிரிட வேளாண் அதிகாரி 'அட்வைஸ்'
ரசாயன உரம் தவிர்த்து தக்கை பூண்டு பயிரிட வேளாண் அதிகாரி 'அட்வைஸ்'
ADDED : ஜன 22, 2025 07:34 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். விவசாயிகள், நெல், வேர்க்கடலை, கரும்பு, சவுக்கு மற்றும் காய்கறி போன்ற பயிர்கள் அதிகளவில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் மேற்கண்ட பயிர்களுக்கு ரசாயனம் உரம் பயன்படுத்துவதால், மண்புழுக்கள் மற்றும் மண்ணின் தன்மை அழிந்து வருகின்றன. இதையடுத்து, வேளாண் துறையின் சார்பில், இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும் என, விவசாயிகளிடத்தில் விளக்கி கூறியும், தக்கை பூண்டு விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது என, வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:
விவசாயிகள் மண் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். 'முதல்வரின் மண் உயிர் சத்து, மண் உயிர் காப்போம்' என்ற திட்டத்தின்கீழ் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க, பயிரிடுவதற்கு முன் நிலத்தில் தக்கை பூண்டு பயிரிட வேண்டும்.
இதற்காக, விவசாயிகளுக்கு, ஒரு கிலோ தக்கை பூண்டு விதை, 50 சதவீதம் மானியத்தில், 49.50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 20 கிலோ விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. தக்கைபூண்டு விதைகள் விதைத்து, 45 நாட்களில் பூ பூக்கம் தருணத்தில் நிலத்தை உழுது தக்கைபூண்டு அடியுரமாக பயன்படுத்த வேண்டும்.
இந்த தக்கை பூண்டால், பயிரின் மகசூல் அதிகரிப்பதுடன் மண் தரம் குறையாமல் இருக்கும். எனவே, விவசாயிகள் ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.