/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 16ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
திருவள்ளூரில் 16ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 10, 2025 11:36 PM
சென்னை:'திருவள்ளூர் நகராட்சியில், மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருவள்ளூர் நகராட்சி பகுதியில், குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை. பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இதனால், நகராட்சி முழுதும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியினரின் தலையீடு அதிகம் இருப்பதால், நகராட்சியில் போடப்படும் சாலைகளின் தரம் குறைந்து காணப்படுகிறது.
மின் விளக்குகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. நகரின் மையப் பகுதியான, சி.வி.நாயுடு சாலையில் உள்ள பூங்காவில், விதியை மீறி பூமாலை வளாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இவற்றை கண்டித்தும், மக்கள் நலன் கருதியும், அத்தியாவசிய திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 16ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் எதிரில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.