ADDED : ஏப் 28, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி:வனத்துறை அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பலராமன் தலைமையில் கட்சியினர் கறுப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் பொன்னய்யன் கண்டன உரையாற்றினார். பெண் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, பெண்களை இழிவுபடுத்தி பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என, கோஷம் எழுப்பினர்.

