ADDED : ஜூலை 22, 2025 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:டாஸ்மாக்கில் மதுபாட்டில் வாங்கி, சட்டவிரோதமாக விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவாலங்காடு ஊராட்சி சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் பழனி, 59.
இவர், நேற்று முன்தினம் இரவு திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் அருகே, டாஸ்மாக்கில் மதுபாட்டில் வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, திருவாலங்காடு போலீசார் சோதனை மேற்கொண்டதில், பழனி என்பவர் விற்பனைக்காக 10 மதுபாட்டில் வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமு தல் செய்து விசாரிக்கின்றனர்.