ADDED : அக் 17, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த கரலம்பாக்கம் கிராமத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நாராயணன், 60, என்பவர் வீட்டில் 15 குவார்ட்டர் மது பாட்டில்கள் பதுக்கி வைத்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.