ADDED : அக் 17, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை: தனியார் பேருந்து மோதிய விபத்தில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்தவர் வடிவேல் மனைவி கன்னியம்மாள், 70.
இவர், நேற்று மாலை ஆர்.கே.பேட்டை, அம் மையார்குப்பம் கூட்டுச் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்து, கன்னியம்மாள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கன்னியம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சடலத்தை மீட்ட ஆர்.கே.பேட்டை போலீசார், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.