ADDED : அக் 20, 2026 03:35 PM
திருவாலங்காடு: தொழுதாவூரில், மது போதையில் இருந்த வாலிபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன், 38. இவருக்கு, திருமணமாகி மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இவர், சில ஆண்டுகளாக, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதனால், அவரது தாய் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த காசிநாதன், அவரது வீட்டில் இருந்த மின் விசிறியில், புடவையால் தூக்கிட்டுக் கொண்டார்.
அதை கண்ட அருகில் இருந்தோர், காசிநாதனை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, காசிநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
