நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: திருவாலங்காடு ஊராட்சிக்குட்பட்டது கூடல்வாடி பட்டரை ஏரி. பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை மீன் பாசி குத்தகைக்கு ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரும் 12ம் தேதி திருவாலங்காடு ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடக்க இருப்பதாக திருவாலங்காடு நீர்வளத்துறை பொறியாளரால் அறிவிக்கப்பட்டது.
குறைந்த பட்ச ஏலத்தொகையாக 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏலம் கேட்போர் வரைவு காசோலையாக நீர்வளத்துறைக்கு செலுத்திய பின் ஏலத்தில் பங்கேற்று ஏலம் கேட்க முடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.