/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகில இந்திய 'கார்ப் பால்' 20 பல்கலை பலப்பரீட்சை
/
அகில இந்திய 'கார்ப் பால்' 20 பல்கலை பலப்பரீட்சை
ADDED : மார் 02, 2024 10:44 PM

சென்னை:அகில இந்திய அளவில் பல்கலைகளுக்கு இடையிலான மாபெரும் 'கார்ப் பால்' போட்டி, சென்னை வண்டலுார் கிரசண்ட் பல்கலையில் துவங்கியுள்ளது.
ஒரு அணியில் இருபாலரும் பங்கேற்கும் இப்போட்டியில், நாடு முழுதும் இருந்து, 20 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.
இப்போட்டியை, கிரசண்ட் பல்கலையின் தலைவர் ஆரிப் புகாரி ரகுமான், துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ராஜா ஹூசைன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
நேற்று நடந்த காலிறுதி போட்டிகளில், கோழிக்கோடு பல்கலை, 21 - 6 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணியையும், ராஜஸ்தான் அபெக்ஸ் அணி, 8 - 3 மஹாராஷ்டிரா கோண்ட்வானா பல்கலையும், சாவித்திரி பால் புனே பல்கலை, 11 - 6 ஹரியானா எம்.டி.யூ., ரோதக் அணியையும் தோற்கடித்தன.
அனைத்து போட்டிகள் முடிவில், கோழிகோடு பல்கலை, அபெக்ஸ் பல்கலை, சாவித்திரி பாய் புனே பல்கலை மற்றும் கிரசண்ட் பல்கலை அணிகள், 'லீக்' சுற்றுக்கு தகுதி பெற்று மோதி வருகின்றன.

