/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை பணிக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
/
சாலை பணிக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
ADDED : அக் 11, 2024 01:56 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, பஜார் பகுதியை ஒட்டி உள்ளது கண்ணதாசன் நகர். வளர்ந்து வரும் இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்தது. கடந்த ஒரு ஆண்டிற்கு முன் இப்பகுதி மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப, 20 லட்ச ரூபாய் மதிப்பில் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த பணியின் போது அங்குள்ள சாலை பெருமளவு சேதம் அடைந்தது.
இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இச்சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கஷ்டப்பட்டனர்.
இங்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ.,டி.ஜெ.கோவிந்தராஜன் தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கூறும்போது, கண்ணதாசன் நகரில் சிமென்ட் சாலை பணிக்கு, 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டது. மொத்தம், 205 மீட்டர் துாரத்தில் சிமென்ட் சாலை அமைய உள்ளது. சாலைப் பணி தொடரும்' என்றார்.

