/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி வகுப்பறை கட்ட ரூ.32 லட்சம் ஒதுக்கீடு
/
பள்ளி வகுப்பறை கட்ட ரூ.32 லட்சம் ஒதுக்கீடு
ADDED : அக் 14, 2024 06:09 AM
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே, நந்திமங்களம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளி கட்டடம் கட்டி, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சிமென்ட் காரைகள் பெயர்ந்து அவ்வப்போது பெயர்ந்து விழுந்தன.
மழைக்காலங்களில் தண்ணீர் கசிவதால் கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலை இருந்தது. மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்தனர். இப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குழந்தைகள் நேய உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறைகள் கட்ட 32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கீதாமுரளி கூறுகையில், 'நந்திமங்களம் அரசு பள்ளி வகுப்பறை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டு உள்ளது. பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, விரைவில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கும்' என்றார்.