/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமதித்தது 5; எடுத்ததோ 12 அடி காசிநாதபுரம் ஏரியில் விதிமுறை மீறல்
/
அனுமதித்தது 5; எடுத்ததோ 12 அடி காசிநாதபுரம் ஏரியில் விதிமுறை மீறல்
அனுமதித்தது 5; எடுத்ததோ 12 அடி காசிநாதபுரம் ஏரியில் விதிமுறை மீறல்
அனுமதித்தது 5; எடுத்ததோ 12 அடி காசிநாதபுரம் ஏரியில் விதிமுறை மீறல்
ADDED : ஜூன் 21, 2025 12:57 AM

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் - திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடி வரை உள்ள இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், ஆறு மாதங்களாக நடந்து வருகிறது.
இப்பணிகளுக்கு, திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட காசிநாதபுரம் ஏரியில் மண் எடுக்க, கலெக்டர் அனுமதி அளித்தார். ஏரியில், 5 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவில் உள்ளது.
ஆனால், 12 அடி ஆழத்திற்கு மேல் ஏரியில் மண் அள்ளப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும், விவசாய கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏரியில் அனுமதித்த ஆழத்திற்கு தான் மண் எடுக்க வேண்டும் என, பட்டாபிராமபுரம் ஊராட்சி மக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை மண் எடுக்கும் இயந்திரங்கள் மற்றும் லாரிகளை சிறைபிடித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஏரியில் மண் எடுப்பதை கலெக்டர் ஆய்வு செய்து, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வகையில் கண்காணிக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.