/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.97 லட்சம் மோசடிக்கு உடந்தை அம்பத்துார் நபர் சிக்கினார்
/
ரூ.97 லட்சம் மோசடிக்கு உடந்தை அம்பத்துார் நபர் சிக்கினார்
ரூ.97 லட்சம் மோசடிக்கு உடந்தை அம்பத்துார் நபர் சிக்கினார்
ரூ.97 லட்சம் மோசடிக்கு உடந்தை அம்பத்துார் நபர் சிக்கினார்
ADDED : ஜூலை 17, 2025 02:26 AM

ஆவடி:வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் கும்பலுக்கு, வங்கி கணக்கு விபரங்களை கொடுத்து உடந்தையாக இருந்த தொழிலாளியை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி அடுத்த தண்டலத்தைச் சேர்ந்தவர் கிஷோர், 37. இவர், 2024 ஜூலையில், கூகுளில் விபரங்களை தேடியபோது, 'ஆன்லைன்' பகுதி நேர வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தை பார்த்தார்.
விளம்பரத்தில் இருந்த மொபைல் போன் எண்ணில் பேசியபோது, சிறிய தொகையை முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, மர்ம நபர்கள் ஆசைக்காட்டினர்.
அதன்படி, மர்ம நபர்கள் கூறிய 50க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில், 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை, 97.33 லட்சம் ரூபாய் வரை அனுப்பியுள்ளார்.
ஆனால், மர்ம நபர்கள் கூறியது போல், 'கமிஷன்' தொகை வரவில்லை. அதேபோல், முதலீடு செய்த பணத்தையும் திருப்பி எடுக்க முடியவில்லை.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஜனவரியில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், அம்பத்துார் விநாயகபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 50, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், பி.ஏ., பட்டதாரியான இவர், காய்கறி, பழக்கடையில் வேலை செய்தவாறு, கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, மோசடி நபர்களுக்கு வங்கி கணக்கை கொடுத்து உதவியது தெரிந்தது.
போலீசார், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.