ADDED : அக் 14, 2024 06:21 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் காஜா மஸ்தான், 30. தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று விட்டு வீட்டிற்கு யமஹா இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அரண்வாயல்குப்பம் பகுதியில் சாலை பணி நடந்து வருவதால் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டிருந்தது.
இதனால் அவ்வழியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற 108 ஆம்புலன்ஸ் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் காஜா மஸ்தான் படுகாயமடைந்தார்.
தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து பிரிவு போலீசார் படுகாயமடைந்த அவரை மீட்டு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.