ADDED : மே 28, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அம்மா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடல், 2014ம் ஆண்டு 11 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டது. சமீபத்தில் பலத்த காற்றுடன் வீசியதால், பூங்காவில் இருந்த செடிகள் சேதமடைந்தன.
இதனால் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிப்பட்டனர். எனவே, பூங்காவை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைத்து, புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டன.