/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத ரெட்டிக்குளம் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அவலம்

ADDED : பிப் 15, 2024 02:27 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி, பெரிய தெருவிற்கு செல்லும் பகுதியில் ரெட்டிக்குளம் உள்ளது. இக்குளத்தில் தண்ணீர் இருந்தால், பெரியதெரு, பாரதியார் தெரு, ரெட்டிக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இதுதவிர, இந்த கோவில் குளம் அருகில் உள்ள மண்டபத்தில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா அன்று உற்சவர் முருகப்பெருமானுக்கு, ரெட்டிக்குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று, உற்சவருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ரெட்டிக்குளத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது, சிலர் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். மேலும், கோவில் குளத்தில் உள்ள தண்ணீரும் பாசி படர்ந்துள்ளன.
எனவே, நகராட்சி நிர்வாகம் குளத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.