/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்டாலின் ஆட்சி கோழை ஆட்சி அன்புமணி குற்றச்சாட்டு
/
ஸ்டாலின் ஆட்சி கோழை ஆட்சி அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : ஆக 01, 2025 10:17 PM
திருவள்ளூர்:''அதிகாரம் இருந்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை எனக் கூறி, கோழை ஆட்சி நடத்தி வருகிறார், முதல்வர் ஸ்டாலின்'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று, பா.ம.க., தலைவர் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டார். திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இருந்து, ரயில் நிலையம் வரை 1 கி.மீ., நடந்து வந்து, பொதுமக்களை சந்தித்தார்.
பின், பெரியகுப்பத்தில் அவர் பேசியதாவது:
அமெரிக்காவில் கிடைக்கும் அத்தனை போதை பொருட்களும், தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது. இதனால் தான், சமீபத்தில் ஆரம்பாக்கத்தில் எட்டு வயது சிறுமிக்கு பாலியல் பலாத்கார முயற்சி நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன், திருத்தணியில் அது போன்ற முயற்சி நடந்தது.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதே சமயம், அண்டை மாநிலங்களான, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதிகாரம் வைத்துக் கொண்டு, இல்லை எனக் கூறிக் கொண்டு கோழை ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சிக்கு வர ஆதரவளித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது அதிருப்தியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.