/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி நகைக்கடையில் 3 சவரன் திருடிய பெண்
/
திருத்தணி நகைக்கடையில் 3 சவரன் திருடிய பெண்
ADDED : ஆக 01, 2025 10:18 PM
திருத்தணி:திருத்தணியில் உள்ள நகைக்கடையில், நகை வாங்குவது போல் நடித்து, 3 சவரன் கம்மலை பெண் திருடிச் சென்றார்.
திருத்தணி ம.பொ.சி., சாலையில் பிரகாஷ், 40, என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 35 - 40 வயதுள்ள பெண் ஒருவர், பிரகாஷ் கடைக்கு வந்து, 'தங்க கம்மல் வாங்க வந்துள்ளேன்' எனக்கூறி, வெவ்வேறு டிசைன்களை காட்டுமாறு கேட்டுள்ளார்.
பிரகாஷ், 10க்கும் மேற்பட்ட கம்மல்களை காட்டியுள்ளார். அரைமணி நேரம் கம்மல்களை பார்த்த அப்பெண், 'எனக்கு பிடித்த டிசைன் இல்லை' எனக் கூறி, கடையில் இருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து சந்தேகமடைந்த பிரகாஷ், கம்மல்களை எண்ணிய போது, 3 சவரன் கம்மல்கள் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் இருந்த 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்த போது, கடைக்கு வந்த பெண், கம்மல்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

