/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் தரிசனம்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் தரிசனம்
ADDED : பிப் 16, 2025 03:33 AM

திருத்தணி:ஆந்திர மாநில முதல்வரும் தெலுங்கு திரைப்பட நடிகருமான பவன்கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டார். அவர், 13ம் தேதி சுவாமி மலை, திருச்செந்துார் முருகன் கோவில், நேற்று முன்தினம் (14ம்தேதி) மதியம் திருப்பரங்குன்றம், மாலையில் பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின் இன்று காலையில், பழமுதிர்சோலை கோவிலில் தரிசனம் செய்தார். பின் காலை, 10:30 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் அரக்கோணம் ராஜாளி விமான நிலைத்திற்கு வந்தார். பின் அங்கிருந்த காரில் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, மதியம், 12:10 மணிக்கு வந்தார்.
அங்கு கோவில் கண்காணிப்பாளர் சித்ராதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி ஆர்.டிஓ., தீபா ஆகியோர் துணை முதல்வரை வரவேற்று வி.ஐ.பி., தரிசனத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலில், பவன்கல்யாண் கொடிமரம் வணங்கிவிட்டு ஆபத்சகாய விநாயகர், உற்சவர் சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டார். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் துணை முதல்வருக்கு பிரசாதம் மற்றும் முருகன் திருவுருவப்படம் வழங்கி மரியாதை செய்தனர். பின் மதியம், 12:40 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து காரில் மீண்டும் அரக்கோணம் ராஜாளிக்கு சென்று விமானம் மூலம் ஆந்திராவுக்கு சென்றார். திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மூலவருக்கு அபிஷேகம், 40 மணி நிமிடம் தாமதம்
முருகன் கோவிலில் முக்கிய விழாக்கள், கிருத்திகை, ஞாயிறு மற்றும் செவ்வாய்கிழமைகளில் அதிகாலை, 5:00 மணிக்கும், மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மீதமுள்ள நாட்களில் காலை, 8:00 மணிக்கு கால்சந்தி, மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் மாலை, 5:00 மணிக்கு சாய்ரட்சை பூஜை என மூன்று வேளையில் மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படும். இந்த அபிஷேகத்திற்கு பக்தர்கள், 2000 ரூபாய் செலுத்தி அபிஷேகத்தில் பங்கேற்பர். இந்நிலையில் நேற்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் மதியம், 12:10க்கு வந்ததால் பாதுகாப்பு நலன் கருதி அபிஷேகம் 12:00 மணிக்கு துவங்காமல், மதியம், 12:45 மணிக்கு அபிஷேகத்திற்கு பக்தர்கள் அனுமதித்து பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. இதனால் அபிஷேகத்திற்கு பணம் கட்டிய பக்தர்கள் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்திக்கான பாக்ஸ்.
நான்கரை ஆண்டு நேர்த்தி கடன் நேற்று நிறைவேற்றம் பவன்கல்யாண் மகிழ்ச்சி
ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யாண் நேற்று மதியம் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின், அவர் கூறுகையில், கடந்த நான்கரை ஆண்டுக்கு முன், தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில்களில் தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்த வேண்டும் என எண்ணினேன். தற்போது தான் முருகன் எனக்கு அந்த வாய்ப்பபை வழங்கினார். மூன்று நாட்களில் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்து நேர்த்தி கடனை நிறைவேற்றியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆறு கோவில்களிலும் சிறப்பான வரவேற்பு அளித்து நேர்த்தி கடனை நிறைவேற்றியது உதவிய அனைத்து கோவில் நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றி என கூறினார்.