/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டில் கடத்திய ஆந்திர வாலிபர் கைது
/
மதுபாட்டில் கடத்திய ஆந்திர வாலிபர் கைது
ADDED : ஆக 31, 2025 02:22 AM
திருத்தணி:மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆந்திர வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து, திருத்தணியில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று, திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில் சோதனை நடத்தினர்.
அப்போது, வாலிபர் ஒருவர் தலையில் கோணிப்பை சுமந்து நடந்து வந்தார். சந்தேகமடைந்த போலீசார், கோணிப்பையை சோதனை செய்ததில், 60 ஆந்திர மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், நகரி அடுத்த பி.என்.கண்டிகையைச் சேர்ந்த லோகேஷ், 25, என்றும், மதுபாட்டில்களை திருத்தணி பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.