/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம்
/
பழுதடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம்
ADDED : செப் 04, 2025 02:43 AM

ஆர்.கே.பேட்டை:தேவலாம்பாபுரத்தில் பழுதடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், தேவலாம்பாபுரத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 25 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம், உரிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளது. மழைக்காலத்தில் மழைநீர் ஒழுகுவதோடு, அங்கன்வாடி மையத்திற்குள் நீர் புகும் நிலை உள்ளது.
இதனால் தேவலாம்பாபுரம் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பழைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.