/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த சமுதாயக்கூட கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்
/
பழுதடைந்த சமுதாயக்கூட கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்
பழுதடைந்த சமுதாயக்கூட கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்
பழுதடைந்த சமுதாயக்கூட கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்
ADDED : டிச 08, 2024 02:50 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், காவேரிராஜபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மராஜபேட்டை கிராமத்தில், 450 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
திரவுபதியம்மன் கோவில் எதிரே சமுதாயக்கூடம் அமைந்துள்ளது. முறையான பராரிப்பு இல்லாததால், இந்த கட்டடத்தின் மேல்தளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து கிடக்கின்றன. இதனால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், இந்த சமுதாயக்கூடத்தில் தற்போது அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பராமரிப்பு இன்றி சீரழிந்து வரும் சுமுதாயக்கூடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, விரைவில் புதிய அங்கன்வாடி கட்டடத்திற்கு இந்த மையத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.