/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி பணியாளர்கள் நுாதன ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி பணியாளர்கள் நுாதன ஆர்ப்பாட்டம்
ADDED : மே 10, 2025 02:55 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், டோல்கேட் அருகில் பட்டை நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர் சங்கம், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், சத்துணவு பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் அங்கன்வாடி சங்கம் மற்றும் தோழமை சங்கத்தினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லுார்துசாமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தேர்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம், 6,750 ரூபாயை அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தினர்.
பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், தங்களது நெத்தியில் பட்டை நாமமிட்டு, மடிப்பிச்சை ஏந்தி கோஷமிட்டனர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.