/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்
/
சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்
ADDED : நவ 04, 2025 09:44 PM
திருத்தணி: சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.
திருத்தணி தாலுகாவில் உள்ள நாபளூர் அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன், தாடூர் கடலீஸ்வரர், திருத்தணி வீரட்டீஸ்வரர், திருக்குளம் சரவண பொய்கை அருகே உள்ள சிவன் கோவில், சதாசிவலிங்கேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களில், இன்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மாலை 6:00 - இரவு 8:00 மணி வரை அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 5:30 மணிக்கு மூலவர் வால்மிகீஸ்வர சுவாமிக்கு அன்ன அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்படும். முன்னதாக, சன்னிதியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்படும்.
அதேபோல், ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வர சுவாமி கோவில், தேவந்தாக்கம் தேவநாதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.

