/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
/
மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
ADDED : நவ 04, 2025 09:44 PM
ஆர்.கே.பேட்டை: மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான பணியில், 100 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி இன்று துவங்குகிறது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி சோதனை முயற்சியாக நடைபெற உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணியில், 100 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது.
பணி ஆணை பெற்ற ஆசிரியர்களுக்கு, இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தனியார் கல்லுாரியில், இன்று காலை 9:30 மணிக்கு பயிற்சி துவங்க உள்ளது.
பயிற்சிக்கு பின் கணக்கெடுப்பு பணியில், நவீன வரைபடங்களுடன் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் மேற்பார்வையாளர்களாக, கல்வி, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி என, பல்வேறு துறையினரும் இணைந்து செயல்படுவர் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

