/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயணியர் நிழற்குடை அமைக்க பாலவாக்கம் மக்கள் எதிர்பார்ப்பு
/
பயணியர் நிழற்குடை அமைக்க பாலவாக்கம் மக்கள் எதிர்பார்ப்பு
பயணியர் நிழற்குடை அமைக்க பாலவாக்கம் மக்கள் எதிர்பார்ப்பு
பயணியர் நிழற்குடை அமைக்க பாலவாக்கம் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 04, 2025 09:44 PM
ஊத்துக்கோட்டை: பாலவாக்கம் கிராமத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாபுரம் ஒன்றியம் பாலவாக்கம் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர், ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். போக்குவரத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நம்பியுள்ளனர்.
இவர்கள் பேருந்திற்காக காத்திருக்க, வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை சேதமடைந்து இருந்ததால், சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டது. அங்கு, மீண்டும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.