/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'கல்வி கூடங்களில் கம்பர்' பேச்சு போட்டி அறிவிப்பு
/
'கல்வி கூடங்களில் கம்பர்' பேச்சு போட்டி அறிவிப்பு
ADDED : ஜன 19, 2025 02:48 AM
சென்னை, தமிழக பள்ளி, கல்லுாரிகளில், கம்ப நாட்டாழ்வாரின் ராமவதாரம் என்ற காவியத்தில், பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின், எட்டம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிமாணவர்கள், 'நடையில் நின்றுயர் நாயகன்'அல்லது 'கம்பர் காட்டும் அன்பும் அறனும்' ஆகிய தலைப்புகளில், எட்டு நிமிடங்கள் பேச வேண்டும்.
இப்போட்டி, ஜன., 28ம் தேதி, பாரதிய வித்யா பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம், எண்: 6, கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலை, கீழ்ப்பாக்கம் - 10 என்ற முகவரில்நடக்கிறது.
அதேபோல், இந்த மூன்று மாவட்டங்களின் இளங்கலை மற்றும் முதுகலை கல்லுாரி மாணவர் கள், 'கம்பர் காட்டும் ராமன்' அல்லது 'கம்பர் வழியில் அறம் தலை நிறுத்தல்' என்ற தலைப்புகளில், 10 நிமிடங்கள் பேசவேண்டும்.
இந்த போட்டி, ஜன., 29ல், பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் - 4 என்ற முகவரியில்நடக்கிறது.
விபரங்களுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனந்தராமன், தமிழ் துறை தலைவர், பாரதிய வித்யா பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம்,கீழ்ப்பாக்கம் என்றமுகவரியில் தொடர்புகொள்ளலாம்.
மேலும், 95000 80515 என்ற எண்ணிலும், kambarkalvichennai@bvbchennai.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

