ADDED : பிப் 09, 2024 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவரும், கிராம கல்விக்குழு தலைவருமான துரைசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசு வரவேற்றார்.
இதில் புச்சிநாயுடுகண்டிகை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் பங்கேற்று, கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவ—மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து பள்ளி அளவில் நடந்த தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கி தலைமை ஆசிரியர் எழிலரசு பாராட்டினர். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.