ADDED : பிப் 10, 2024 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளியில் நேற்று ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், மாணவ - மாணவியர் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஏற்கனவே நடத்தப்பட்ட கதை, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் சம்பத், பரிசு மற்றும் சான்றுகளை வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர் மகேஷ், நடன போட்டியில் பங்கேற்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.