/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவல்லிக்கேணியில் மாடு முட்டி மேலும் ஒரு முதியவர் படுகாயம்
/
திருவல்லிக்கேணியில் மாடு முட்டி மேலும் ஒரு முதியவர் படுகாயம்
திருவல்லிக்கேணியில் மாடு முட்டி மேலும் ஒரு முதியவர் படுகாயம்
திருவல்லிக்கேணியில் மாடு முட்டி மேலும் ஒரு முதியவர் படுகாயம்
ADDED : ஜன 30, 2024 12:52 AM
ஐஸ் ஹவுஸ் : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன், மாடு முட்டியதில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, ஐஸ் அவுஸ் பகுதியில் சாலையில் திரிந்த பசு மாடு, ஆறு பேரை முட்டித் தள்ளியது.
இந்த சம்பவத்திற்குப் பின், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சாலையில் திரிந்த மாடுகளை பிடித்துச் சென்று, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் மீண்டும் ஒரு சம்பவமாக நேற்று மதியம், மாடு ஒன்று முட்டி துாக்கி வீசியதில், முதியவரின் இடுப்பு எலும்பு உடைந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலத்த காயமடைந்த இந்த முதியவர், திருவல்லிக்கேணி பந்தள வேணுகோபால் தெருவைச் சேர்ந்த கன்னியப்பன், 77, எனத் தெரிந்தது.
தற்போது அவருக்கு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஐஸ்ஹவுஸ் போலீசார்விசாரிக்கின்றனர்.
சம்பவம் நடக்கும் போது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.