/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 30, 2024 12:43 AM

திருவள்ளூர்:ஊழல் ஒழிப்பு துறை சார்பில், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று துவங்கியது.
திருவள்ளூர் மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு துறை சார்பில் நேற்று பள்ளி, மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருவள்ளூர் மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரமூர்த்தி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள், ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பதாகை ஏந்தியும், ஊழலை ஒழிக்க கோஷமிட்டும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் ஆண்டனி ஸ்டாலின், எஸ்.ஐ., குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.