/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருத்தணி முருகன் கோவிலில் ஆய்வு
/
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருத்தணி முருகன் கோவிலில் ஆய்வு
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருத்தணி முருகன் கோவிலில் ஆய்வு
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருத்தணி முருகன் கோவிலில் ஆய்வு
ADDED : நவ 22, 2025 02:16 AM

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கோவிலின் அமைப்பு குறித்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில், பாதுகாப்பு மற்றும் கோவில் அமைப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
நேற்று காலை சென்னையில் இருந்து தீவிரவாத தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையிலான போலீசார், திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தனர்.
பின், கோவிலின் அமைப்பு மற்றும் வரைபடங்கள் குறித்து, கோவில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும், முக்கிய விழா நாட்களின் போது, அதிகளவிலான பக்தர்கள் வருகின்றனர். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், எந்த வழியில் பக்தர்கள் வெளியே செல்வர்.
அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என, டி.எஸ்.பி., சிவகுமார், கோவில் அதிகாரி களிடம் கேட்டறிந்தார்.