/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்ட நெரிசலை தவிர்க்க திட்டம் சிறுவாபுரியில் சிறப்பு குழு ஆய்வு
/
கூட்ட நெரிசலை தவிர்க்க திட்டம் சிறுவாபுரியில் சிறப்பு குழு ஆய்வு
கூட்ட நெரிசலை தவிர்க்க திட்டம் சிறுவாபுரியில் சிறப்பு குழு ஆய்வு
கூட்ட நெரிசலை தவிர்க்க திட்டம் சிறுவாபுரியில் சிறப்பு குழு ஆய்வு
ADDED : நவ 22, 2025 02:15 AM

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் சிரமப்படுவர். இதை தடுப்பதற்காக, மாற்று வழிப்பாதை, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹிந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் ரவிசந்திரன், திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்தா சுக்லா உள்ளிட்டோர் கொண்ட சிறப்பு குழுவினர், சிறுவாபுரி கோவிலில் நேற்று ஆய்வு மேற் கொண்டனர்.
அப்போது, ஹிந்து அற நிலையத் துறையின் திரு வள்ளூர் இணை ஆணையர் அனிதா, உதவி ஆணையர் சிவஞானம், செயல் அலுவலர் மாதவன் ஆகியோர், 16 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் குறித்து வரைபடம் மூலம் விளக்கி கூறினர்.
அதன்பின் சிறப்பு குழுவினர் கூறியதாவது:
'இங்கு, பக்தர்கள் தங்கும் விடுதி, பார்க்கிங் வளாகங்கள், அன்னதான கூடம், கழிப்பறை உள்ளிட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
'கூட்ட நெரிசலில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில், மாற்று வழிப்பாதைக்கான நில எடுப்பு பணி, இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும். அதன்பின், ஆறு மாதத்திற்குள் மாற்று வழிப்பாதை பணி நிறைவு பெறும்' என்றனர்.

