/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பசுமை சாம்பியன்' விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
'பசுமை சாம்பியன்' விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மார் 26, 2025 09:18 PM
திருவள்ளூர்,:சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் 'பசுமை சாம்பியன்' விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 1 கோடி ரூபாய் மதிப்பில், ஆண்டுதோறும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு 'பசுமை சாம்பியன்' விருது, 100 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் பண முடிப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024- - 25ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு வாயிலாக, தகுதி வாய்ந்த 100 பேரை தேர்வு செய்யும். இவ்விருதிற்கு, www.tntiruvallurawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவலுக்கு, திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி கடைசி நாள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.