/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை இணையத்தில் விண்ணப்பம் வரவேற்பு
/
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை இணையத்தில் விண்ணப்பம் வரவேற்பு
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை இணையத்தில் விண்ணப்பம் வரவேற்பு
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை இணையத்தில் விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 11, 2025 12:46 AM
திருவள்ளூர்:அரசு கலைக் கல்லுாரிகளில் சேர மாணவர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லுாரி மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை கல்லுாரி ஆகிய மூன்று கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்கள் வாயிலாக, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பேருந்து வசதி உள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு 2025 - -26ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக, வரும் 27ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் மற்றும் பதிவுக் கட்டணம் 2 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, கல்லுாரி கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தின், 044 - 2434 3106, 2434 2911 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.