ADDED : டிச 03, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், : தமிழக அரசின் சமூக நீதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சமூக நீதிக்காக பாடுபடுவோருக்காக சமூக நீதிக்கான பெரியார் விருது தமிழக அரசு வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விருதுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டோர், முழு விபரங்களுடன், விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.