/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கைவினைஞர் பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கைவினைஞர் பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கைவினைஞர் பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கைவினைஞர் பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : அக் 03, 2025 09:48 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தேர்வு கட்டணம் 200 ரூபாய் செலுத்தி, உரிய ஆவணங்களுடன், மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
முதல்நிலை கருத்தியல் தேர்வு நவ., 4, செய்முறை தேர்வு 5ம் தேதி, கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். தனித்தேர்வராக விண்ணப்பிக்க, வரும் 8ம் தேதி கடைசி நாள்.
மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ, dstotvlr2025@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 94990 55663, 82483 33532 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.