/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியை காட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது
/
கத்தியை காட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது
ADDED : அக் 03, 2025 09:38 PM
திருவள்ளூர்,:திருவள்ளூர் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில், சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமுருமு, 24. காக்களூரில் வசித்து வரும் இவர், கடந்த 1ம் தேதி இரவு 10:00 மணிக்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, ஆவின் பால் பண்ணை அருகே, மூன்று பேர் மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாயை பறித்து சென்றது.
இது குறித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் போலீசார், காக்களூரைச் சேர்ந்த பிரேம்குமார், 24, மற்றும் 15, 17 வயது சிறுவர்கள் என மூவரை கைது செய்தனர். மேலும், 15 வயது சிறுவனின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.
பிரேம்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிரேம்குமாரை திருவள்ளூர் கிளை சிறையிலும், சிறுவனை சென்னை கெல்லீஸ் சிறுவர் காப்பகத்திலும் அடைத்தனர்.