/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
/
பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 08, 2024 01:11 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற, இணையத்தில் வரும் 19க்குள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வரும் 31ல் நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையின் போது, தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், https://www.ineseval.tn.gov.in மற்றும் இ- - சேவை மையங்களிலும், வரும் 19க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தற்காலிக பட்டாசு உரிமம் பெற திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை வட்டங்களிலிருந்து விண்ணப்பிப்போர் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி-பகுதி, திருவள்ளூர்-பகுதி வட்டங்களைச் சேர்ந்தோர், ஆவடி காவல் ஆணையரிடம் விண்ணப்பிக்கலாம்.
தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

