/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
12 முதுநிலை வருவாய் ஆய்வாளர் நியமனம்
/
12 முதுநிலை வருவாய் ஆய்வாளர் நியமனம்
ADDED : செப் 24, 2025 09:30 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 12 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 'குரூப் - 2ஏ' தேர்வின் மூலம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கு தேர்வானவர்களில் 12 பேர், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், 12 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன் - திருவள்ளூர், சந்திரன் - திருத்தணி, கோவிந்தராஜன் - கும்மிடிப்பூண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.