/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நியமனம்
/
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நியமனம்
ADDED : ஜன 23, 2025 08:44 PM
திருவள்ளூர்:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூக பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் - 1 மற்றும் சமூக பணியாளர்- --- 2 ஆகிய பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
பட்டப்படிப்பு படித்த, 42 வயதிற்குள் உள்பட்டோர், திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி வாய்ந்தோர், விண்ணப்பத்தினை பிப்.6ம் தேதிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும், விபரம் பெற, 044 -27665595 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.