/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டி தொகுதியில் பறக்கும் படை நியமனம்
/
கும்மிடிப்பூண்டி தொகுதியில் பறக்கும் படை நியமனம்
ADDED : மார் 17, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு படை நேற்று நியமிக்கப்பட்டனர்.
ஒரே இடத்தில் நின்று வாகன தணிக்கை செய்து கண்காணிக்க ஒன்பது குழுவினர், தொகுதிக்கு முழுதும் ரோந்து சென்று கண்காணிக்க ஒன்பது குழுவினர் என மொத்தம், 18 குழுவினர் நியமிக்கப்பட்டனர். ஒரு குழுவில், அரசு துறை அலுவலர், போலீஸ் உட்பட மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். அனைத்து குழுவினரும், சூழற்சி முறையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

