/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு திட்டங்களை கண்காணிக்க தொழில்முறை அலுவலர் நியமனம்
/
அரசு திட்டங்களை கண்காணிக்க தொழில்முறை அலுவலர் நியமனம்
அரசு திட்டங்களை கண்காணிக்க தொழில்முறை அலுவலர் நியமனம்
அரசு திட்டங்களை கண்காணிக்க தொழில்முறை அலுவலர் நியமனம்
ADDED : ஜன 15, 2025 11:46 PM
திருவள்ளூர், தமிழக சட்டசபையில், 'அரசின் முக்கிய திட்டங்களைக் கண்காணிக்க, மாவட்ட அளவில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பணிபுரிவதற்காக இளம் தொழில்முறை அலுவலர் நியமிக்கபட உள்ளார். இந்த பதவிக்கு, பி.இ., கணினி அறிவியல், ஐ.டி., டேட்டா சயின்ஸ் மற்றும் அதன் தொடர்பாக பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பதவிக்கான விண்ணப்பம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்களின் தகவல் பலகையிலும் மற்றும் கலெக்டர் அலுவலக தகவல் பலகையிலும் வைக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பம் https://tiruvallur.nic.in/- மாவட்ட இணைய தளம் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, இம்மாதம், 22ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் தபால் மூலமாகமவோ அல்லது நேரடியாகவோ திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது.
இவ்வாறு கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

