/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் மதுபோதையில் தகராறு
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் மதுபோதையில் தகராறு
ADDED : செப் 17, 2024 05:54 AM
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கோணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார், 27. இவர் திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணன், தொழில் நுட்ப உதவியாளர் பரத்குமார் ஆகியோர் திருத்தணி அடுத்த வி.சி.ஆர்., கண்டிகை கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் போடப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்றனர்.
அங்கு ஆய்வு செய்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற பீமன், 21, அவரது தம்பி மதியரசன், 20 ஆகிய இருவரும் மது போதையில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் இடையூறு செய்தனர்.
அப்போது, தொழில் நுட்ப உதவியாளர் பரத்குமார் மொபைல் போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் சேர்ந்து கல்லால் பரத்குமாரை தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த பரத்குமார் பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி அளித்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

