/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆம்லெட் கேட்டு தகராறு மூவர் மீது தாக்குதல்
/
ஆம்லெட் கேட்டு தகராறு மூவர் மீது தாக்குதல்
ADDED : அக் 27, 2024 08:10 PM
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 50, இவரது மனைவி மல்லிகா, 45. இவர்கள் இருவரும், என். என். கண்டிகை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 40 என்பவர் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, என். என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த ராகுல், அவரது நண்பர் விமல் ஆகிய இருவரும், மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்து ஆம்லெட் கேட்டனர். உடனே ஆம்லெட் வேண்டும் என தகராறு செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த கரண்டியால், கணேசன், மல்லிகா மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை தாக்கினர். மூவரும் பலத்த காயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

