/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவிலில்களில் அர்ச்சுனன் தபசு
/
திரவுபதியம்மன் கோவிலில்களில் அர்ச்சுனன் தபசு
ADDED : மே 06, 2025 10:01 PM
திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி விழா கடந்த மாதம், 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மரத்தின் உச்சியில் இருந்து அர்ச்சுனன் தவம்புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 11ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.
* அதேபோல், ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் நடப்பட்டிருந்த பனைமரத்தில், அரச்சுனன் வேடம் தரித்த தெருக்கூத்து நடிகர்கள், தபசு மேற்கொண்டார். நாளை மறுநாள் சக்தி கரகம் ஊர்வலமும், ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.