/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் ராணுவ ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
/
திருவள்ளூரில் ராணுவ ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 12, 2024 12:50 AM
திருவள்ளூர்:திருவள்ளூரில், ராணுவ ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ராணுவ ஓய்வூதியம் குறைதீர்க்கும் தீர்ப்பாயத்தினர் குழு, நாளை முகாமிட்டு பணி மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள குறைகளை களைந்து, ஓய்வூதியம் விரைவில் அனுமதிக்கவும் உயிர் சான்று சமர்பிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளன.
எனவே, ராணுவ ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் அசல் படை விலகல் சான்று, ஓய்வூதியம் ஒப்பளிப்பு ஆணை மற்றும், வங்கி கணக்கு புத்தகத்துடன் ஓய்வூதிய குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.