sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி உபகோவில்களில் ஆருத்ரா விழா

/

திருத்தணி உபகோவில்களில் ஆருத்ரா விழா

திருத்தணி உபகோவில்களில் ஆருத்ரா விழா

திருத்தணி உபகோவில்களில் ஆருத்ரா விழா


ADDED : ஜன 14, 2025 12:14 AM

Google News

ADDED : ஜன 14, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆருத்ரா விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை மலைக்கோவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் சன்னிதியில், மூலவருக்கு பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நேற்று காலை, 6:00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதேபோல, முருகன் கோவிலின் உபகோவிலான மத்துார் அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை, நடராஜபெருமானுக்கு, 15 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், நடராஜ பெருமானுக்கு, 33 பழ வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

திருத்தணி சுந்தரவிநாயகர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு உற்சவர் சுந்தரேஸ்வரர் டிராக்டரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், வீதிகளில் டிராக்டரில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அருங்குளம் அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நேற்று ஆருத்ராவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.






      Dinamalar
      Follow us