/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் கண்டபடி காவல் நிலைய எல்லை புகார் அளிக்க 20 கி.மீ., செல்லும் அவலம்
/
திருவள்ளூரில் கண்டபடி காவல் நிலைய எல்லை புகார் அளிக்க 20 கி.மீ., செல்லும் அவலம்
திருவள்ளூரில் கண்டபடி காவல் நிலைய எல்லை புகார் அளிக்க 20 கி.மீ., செல்லும் அவலம்
திருவள்ளூரில் கண்டபடி காவல் நிலைய எல்லை புகார் அளிக்க 20 கி.மீ., செல்லும் அவலம்
ADDED : ஏப் 26, 2025 10:14 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் பல உட்கோட்டங்களில், அருகில் காவல் நிலையம் நிலையம் இருந்தும், எல்லை நிர்ணயிக்கப்பட்ட காரணத்தால், பல கி.மீட்டர் துாரம் அழைய வேண்டிய உளளது. இதனால், வீண் அலைச்சல் காரணமாக புகார்தாரர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் எல்லை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு-காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் கடந்த, 1996ம் ஆண்டு உருவானது. அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய உட்கோட்டங்கள் இருந்தன. தற்போது, பொன்னேரி உட்கோட்டம் ஆவடி மாநகர காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய உட்கோட்டங்களில் 28 காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும், 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 3 கலால் காவல் நிலையங்கள் உள்ளன.
தற்போது திருவள்ளூர் மாவட்ட காவல் நிலைய எல்லைகள் சுருங்கி இருந்தாலும், மக்களுக்கு பயன் தரும் வகையில் எல்லைகள் அமையப்பெறவில்லை.
உதாரணமாக, ஊத்துக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் மற்றும் வெங்கல் ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகள், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையிலேயே தற்போது உள்ளது. அதாவது, மேற்கண்ட மூன்று காவல் நிலையங்கள் அமைந்துள்ள பகுதியை, ஆரணி ஆறு பிரிக்கிறது.
அதனால், ஆற்றைக் கடக்க வசதி குறைவாக இருந்ததால், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு அருகில் இருந்தாலும், எல்லை பிரச்னை காரணமாக நீண்ட துாரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
கிராமங்களுக்கு தொடர்பில்லாத வகையில் வெவ்வேறு காவல் நிலையத்துடன் அதை இணைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள பாலேஸ்வரம், நெல்வாய், முக்கரம்பாக்கம், தொட்டாரெட்டி குப்பம், காக்கவாக்கம், தொளவேடு, பருத்திமேனி குப்பம், வண்ணாங்குப்பம், தம்பு நாயுடு பாளையம், கயடை, புதுகுப்பம், அண்ணாவரம் உள்ளிட்ட கிராமங்கள் சுமார் 20 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஊத்துக்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள மாம்பாக்கம், வடதில்லை, தாளங்குப்பம், மாம்பாக்கம், வேளகாபுரம், மாமண்டூர், மெய்யூர், ஆவாஜிபேட்டை, ராஜபாளையம், சோமதேவன்பட்டு, ரெட்டி கண்டிகை, வேம்பேடு, கல்பட்டு ஆகியவை, பெரியபாளையம் காவல் நிலைய எல்லையில் உள்ளது. இவற்றில் பெரும்பாலான கிராமங்கள், ஊத்துக்கோட்டை மற்றும் வெங்கல் காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எல்லை பிரச்னை திருவள்ளூர் மாவட்டம் முழுதும் உள்ளது. ஏற்கனவே இருந்த காவல் நிலையத்தை பிரித்து இரண்டாக மாற்றும் போது, இது போன்ற பிரச்னை உருவாகி விடுகிறது. மணவாளநகர் அருகில் உள்ள மேல்நல்லாத்துார் கூட, திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லையில் தான் பிரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

