நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு:திருவேற்காடு அடுத்த பெருமாள் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ், 23; ஆசாரி.
இவர், நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
வேலப்பன்சாவடி அருகே, எதிரே வந்த தனியார் பேருந்து, ஸ்கூட்டரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி விஜயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர், மயிலாடுதுறையைச் சேர்ந்த ரஞ்சித், 35, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

